சன.05,2017. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநில ஆளுநராக பணியாற்றி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட சல்மான் தசீர் அவர்களின் மகன், ஷான் தசீர் அவர்களுக்கு, கிறிஸ்துமஸ் விழா காலத்தில் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன என்று UCAN செய்தியொன்று கூறுகிறது.
பாகிஸ்தானில் நிலவும் தெய்வ நிந்தனை சட்டம் மனிதாபிமானமற்ற சட்டம் என்று குரல் எழுப்பிய, பஞ்சாப் மாநில ஆளுநர், சல்மான் தசீர் அவர்கள், 2011ம் ஆண்டு, அவருடைய மெய்க்காப்பாளர் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டார்.
அவரது மகன் ஷான் தசீர் அவர்கள், இச்சட்டத்தைக் குறித்து தன் கண்டனத்தை, சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததையடுத்து, அவருக்கு கொலை மிரட்டல்கள் எழுந்துள்ளன என்று UCAN செய்தி கூறுகிறது.
ஷான் தசீர் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு காணொளிச் செய்தியில், தேவ நிந்தனை சட்டம் பாகிஸ்தானிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், இச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசியா பீபீ மற்றும் நபீல் மாசி ஆகியோர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |