2017-01-04 16:13:00

நேபாள தலத்திருஅவை, 2017ல் குடும்பங்களை மையப்படுத்தும்


சன..04,2017. நேபாள நாட்டு தலத்திருஅவை, 2017ம் ஆண்டில் குடும்பங்களை தன் பணிகளின் மையமாகக் கொண்டு செயலாற்றும் என்று, அந்நாட்டு அப்போஸ்தலிக்க பிரதிநிதியான ஆயர் Paul Simick அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறினார்.

கத்தோலிக்க குடும்பங்களில் நற்செய்தி இன்னும் ஆழமாக வேரூன்றவும், குடும்ப வாழ்வில் ஈடுபடுவோர், நற்செய்தி விழுமியங்களை தங்கள் ஒவ்வொரு நாள் வாழ்வின் அடித்தளமாக அமைக்கவும் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று, ஆயர் Simick அவர்கள் எடுத்துரைத்தார்.

நேபாள நாட்டில் இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடையே திருமணங்கள் நிகழ்வது அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர் Simick அவர்கள், மதம், கலாச்சாரம் ஆகியவை வேறுபட்டாலும், இறைவன் மீது கொள்ளும் நம்பிக்கை, தம்பதியரையும், அவர்கள் குழந்தைகளையும் இணைப்பதற்குத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று, ஆயர் Simick அவர்கள் கூறினார்.

2016ம் ஆண்டு, நவம்பர், டிசம்பர் மாதங்களில் இலங்கையில் நடைபெற்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கருத்தரங்கில், குடும்பம் முக்கிய கருத்தாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.