2017-01-04 15:53:00

கோவாவில் 'அன்னை தெரேசா அகில உலக திரைப்பட விழா'


சன..04,2017. 'அன்னை தெரேசா அகில உலக திரைப்பட விழா' இந்தியாவின் கோவா நகரில் சனவரி 5ம் தேதி முதல் ஆறு நாட்களுக்கு, கோவா தலத்திருஅவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்னையின் வாழ்வு, பணிகள் ஆகியவற்றை வெளிச்சத்திற்குக் கொணர்வதன் வழியே ஆயிரக்கணக்கானவர்கள் பயனடைவர் என்ற நோக்கத்துடன் இந்த திரைப்பட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, கோவா உயர் மறைமாவட்ட செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாக்கப்பட்ட "In the name of God's poor" என்ற திரைப்படம் இந்த ஆறு நாள் விழாவைத் துவக்கி வைக்கும் என்றும், இதைத் தொடர்ந்து, இந்தியாவில் உருவாக்கப்பட்ட "All for God's Love", "Nirmal Hriday" ஆகிய திரைப்படங்களும், பிரித்தானியாவில் உருவாக்கப்பட்ட "Mother Teresa and Me", மற்றும், இஸ்பெயின் நாட்டில் உருவாக்கப்பட்ட "The Fifth World" என்ற திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன என்றும், UCAN செய்தி கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.