2016-12-30 15:30:00

மாலியின் ஒரு நகரில் முதன்முறையாக கிறிஸ்மஸ்


டிச.30,2016. மாலி நாட்டின், ஒரு நகரில் 2012ம் ஆண்டிற்குப் பின்னர், இவ்வாண்டில் முதன்முறையாக, கிறிஸ்மஸ் பெருவிழா சிறப்பிக்கப்பட்டது என, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

மாலி நாட்டின் பத்து பெரிய நகரங்களில் ஒன்றான Gao நகரை, 2012ம் ஆண்டில், ஜிகாதி இஸ்லாம் தீவிரவாதிகள் கைப்பற்றி, கத்தோலிக்க ஆலயத்தை அழித்ததைத்தொடர்ந்து, கிறிஸ்தவர்கள், அந்நகரை விட்டு வெளியேறினர்.

பிரெஞ்ச் படைவீரர்கள், தீவிரவாதிகளிடமிருந்து அந்நகரை விடுவித்ததற்குப் பின்னர், கிறிஸ்தவர்கள் அந்நகருக்குத் திரும்பிவந்து, ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பினர் என்றும், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், இவ்வாண்டில், உகாண்டா நாட்டு அருள்பணியாளர் ஒருவர், கிறிஸ்மஸ் திருப்பலி நிறைவேற்றினார் என்றும் செய்திகள் கூறுகின்றன.

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியிலுள்ள ஏறக்குறைய ஒரு கோடியே 75 இலட்சம் மக்களில், 95 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். 2 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.

ஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.