2016-12-22 16:29:00

டீஹார் சிறையில் கைதிகளுக்கு கிறிஸ்மஸ் விழா


டிச.22,2016. இந்தியச் சிறைச்சாலைப் பணி என்ற கத்தோலிக்க அமைப்பு, இந்தியாவின் மிகப்பெரும் சிறையான, டீஹார் சிறையில் கைதிகளுக்கு கிறிஸ்மஸ் விழா நிகழ்ச்சிகளை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தியக் கத்தோலிக்கச் சிறைப்பணி அமைப்பு, கடந்த 10 நாட்களாக, இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள சிறைகளில், கிறிஸ்மஸ் விழா நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக, இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அருள்பணி சவரிராஜ் அவர்கள், UCA செய்தியிடம் கூறினார்.

சிறைக் கைதிகளும் சமுதாயத்தின் அங்கம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவே, இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று, அருள்பணி சவரிராஜ் அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்திய ஆயர் பேரவையின் ஓர் அங்கமாக செயலாற்றும் இந்திய கத்தோலிக்க சிறைப்பணி அமைப்பில், அருள்பணியாளர்கள், அருள் சகோதரிகள், இளையோர் உட்பட, 6000த்திற்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்கள் பணியாற்றுகின்றனர் என்றும், இவர்கள், இந்தியாவின் 800 சிறைகளில், பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர் என்றும், UCA செய்தி கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.