2016-12-21 13:01:00

திருவருகைக்காலச் சிந்தனை : நன்றி கூறுவோம்(லூக்:1,46-56)


கடவுள் செய்த அனைத்து காரியங்களையும் நினைத்து, இறைவனை புகழ்ந்தேத்துகிறார், அன்னை மரியா.

இவ்வருடத்தின் இறுதி நாட்களில் இருக்கும் நாமும், நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, இதைக் கடக்க உதவிய கடவுளை நினைத்து பார்ப்போம். அவர் நம்மோடு இருந்து பயணித்தவர்,

நமக்கு உடல், உள்ள சுகம் அளித்தவர்,

நமக்கு எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தவர்,

நமது சுமைகளைச் சுமக்க உதவியவர்,

நமது கடமைகளை ஆற்ற அருளியவர்,

நமது கவலைகளைப் போக்கிய தேற்றரவாளர்,

நமது மன்றாட்டுகளுக்கு இறங்கியவர்,

நமது வேண்டுதல்களைக் கேட்டவர்.

ஆம், நாம் சந்தித்த மேடு பள்ளங்கள், வெற்றி தோல்விகள், சாதனைகள், சோதனைகள் இவற்றில் நம்மை வழிநடத்திச் சென்றிருக்கிறார்;

நாம் சந்தித்த மனிதர்கள், பங்கேற்ற நிகழ்வுகள், பெற்றுக்கொண்ட அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் இவற்றில் உடனிருந்திருக்கின்றார்;

நமது எதிர்பார்ப்புகள் நடந்தேறியத் தருணங்கள், நமது ஆசைகள் நிறைவேறியப் பொழுதுகள், நமது கனவுகள், நிஜமான வேளைகள் அனைத்திலும் பங்கெடுத்திருக்கின்றார். இன்னும், தனிப்பட்ட வாழ்வில், அநேகக் காரியங்களைச் செய்திருக்கின்றார்.

இவற்றை நினைத்து, இறைவனுக்கு நன்றி கூறுவோமா?








All the contents on this site are copyrighted ©.