2016-12-19 14:36:00

திருவருகைக்காலச் சிந்தனை : தாழ்ச்சி(லூக்:1, 26-38)


சிலருக்கு இது ஒரு தீராத நோய். நான்தான் பெரியவன், நான்தான் எல்லாம் அறிந்தவன், நான்தான் சிறந்த திறமைசாலி என, தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்திக்கொண்டிருக்கும் நோய். சிலவேளைகளில், தன்னை முன்னிலைப்படுத்தி தற்பெருமைக் கொள்வது, வாழ்வின் எதார்த்தமாகவே மாறிவிடுகின்றது. ஆனால், பெண்களுக்குள் பேறுபெற்ற, கடவுளின் அருளை அடைந்த அன்னைமரியா, இதோ அடிமை என்று தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார். தான் கடவுளின் தாய் என்ற ஆணவத்திற்கு ஒருபோதும் இடம் கொடுத்ததேயில்லை. இத்தகைய ஒரு புண்ணியம் நிறைந்த தாழ்ச்சி பாதைக்கு, திருவருகைக் காலம் அழைப்பு விடுகின்றது.

தாழ்ச்சி என்பது, தன்னை பற்றி குறைவாக நினைப்பது அல்ல, மாறாக, தான் என்ற எண்ணத்தை குறைப்பது.

தாழ்ச்சி என்பது, தன் கருத்துக்களை அடக்கி வைப்பது அல்ல, மாறாக, பிறரது கருத்துகளுக்கு மதிப்பு தருவது.

தாழ்ச்சி என்பது, தன் திறமைகளை மறைப்பது அல்ல, மாறாக, பிறர் திறமைகளையும் பாராட்டுவது.

தாழ்ச்சி என்பது, தன்னைப்பற்றி குறை கூறுவது அல்ல, மாறாக, பிறரின் குறையை மிகைப்படுத்தாமல் இருப்பது.

தாழ்ச்சி என்பது, தன்னை விலக்கிக்கொள்வது அல்ல, மாறாக, பிறருக்கு முக்கியத்துவம் தருவது.

தாழ்ச்சி என்பது, தனது உரிமைகளை விட்டுக்கொடுப்பது அல்ல, மாறாக, பிறரின் உரிமைகளைப் பறிக்காமல் இருப்பது.

இத்தகையத் தாழ்ச்சியை வாழ்ந்து காட்டுவோமா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.