2016-12-12 15:55:00

தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஆயுத பலத்தை நோக்கிச் செல்கின்றன


டிச.,12,2016. இன்றைய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிகள், பெரும்பாலும் பொதுநலனை மனதில் கொள்ளாமல், இராணுவ பலத்தை நோக்கிச் செல்கின்றன என ஐ.நா. நிறுவனத்தில், திரு அவையின் கவலையை வெளியிட்டார், பேராயர் இவான் யுர்கோவிச்.

2015ம் ஆண்டில் ஒவ்வோரு நிமிடமும் 24 பேர், போரின் காரணமாக தங்கள் சொந்த இடங்களைவிட்டு குடிபெயரவேண்டிய நிலை இருந்தது என்ற, ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் யுர்கோவிச் அவர்கள், அதேவேளையில், பாராமுகம் எனும் கலாச்சாரமும் பெருகிவருவது கவலை தருவதாக உள்ளது என்றார்.

பொதுமக்கள் வாழும் இடங்களில் போர் ஆயுதங்கள் பயன்படுத்தப்படல், போரிடுவோர் மட்டுமன்றி அப்பாவி பொதுமக்களும் தாக்கப்படுதல், தானியங்கி ஆயுத அமைப்புமுறை போன்றவைகளினால் இவ்வுலகம் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து மீண்டும் ஒருமுறை ஆய்வுச் செய்து, இவை ஒழிக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் பேராயர் யுர்கோவிச்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.