2016-12-12 16:19:00

காரித்தாஸ் அமைப்பின் கல்வித் திட்டத்திற்கு உலக அழகி உதவி


டிச.,12,2016. மாணவர்களின் படிப்புக்கென நிதி திரட்டிவரும் காரித்தாஸ் மணிலா அமைப்பின் திட்டங்களுக்கென, பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி உதவியுள்ளார் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த உலக அழகி Pia Wurtzbach.

தன்னால் இயன்றதை, தான் காரித்தாஸ் அமைப்பின் திட்டங்களுக்கு வழங்குவதுபோல், ஏனையோரும் வழங்கவேண்டும் என்று கூறிய உலக அழகி, காரித்தாஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.

உலக அழகி Wurtzbach அவர்களின் கொடைகளைப் பாராட்டிய மணிலாவின் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், ஏழை சகோதர சகோதரிகளுக்கு உதவுவதில் அனைவரும் அன்பின் அடிப்படையில் ஒன்றிணைந்து வரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

கர்தினால் தாக்லே அவர்களைச் சந்தித்து பல பரிசுப் பொருட்களை, இளைஞர்களின் கல்வித் திட்டத்திற்கென வழங்கிய  Wurtzbach அவர்கள், கடந்த ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றவர் ஆவார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.