2016-12-06 14:53:00

திருவருகைக்காலச் சிந்தனை - கற்றுக்கொள்வோம்


தொழிநுட்பம் மிகுந்த இந்த கணனி காலத்தில், தகவல்களைப் பெருக்கிக்கொண்டு, அறிவினை வளர்க்க மறந்துவிடுகின்றோம்.

வசதிகளையும் பணத்தையும் சம்பாதித்துக்கொண்டு, பண்பையும் மதிப்பீடுகளையும் விற்பனை செய்கின்றோம்.

வணிகத்தையும், தொலைத்தொடர்பையும் நெருக்கமாக்கி, பாசஉறவுகளைத் தூரமாக்கிவிடுகின்றோம்.

உடைமைகளை அடுக்கிக்கொண்டு, உணர்வுகளைக் கொன்றுவிடுகின்றோம்.

எல்லாம் அறிந்தவர்கள் என்ற மமதையில் மனதை அடைத்துக் கொள்கின்றோம்.

மனத்தாழ்வும் கனிவும் கொண்ட இயேசு, கற்றுக்கொள்ள, நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

குழந்தைகளிடமிருந்து, கபடற்ற மனதையும், களங்கமில்லா வியப்பையும்,

இயற்கையிடமிருந்து, தன்னலமற்ற கொடையையும், பொறுப்புணர்வையும்,

அனுபவங்களிலிருந்து, வாழ்விற்குத் தேவையான எதார்த்தங்களையும்,

இன்னும் நாம் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள், பதிவுகள், இவற்றிலிருந்து... கற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கிறார், இயேசு. கற்றுக்கொள்வோமா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.