2016-12-05 16:07:00

கடமைகளை பொறுப்புணர்வுடன் ஏற்க இயேசு கற்பிக்கிறார்


டிச.,05,2016. 'வாழ்வின் முக்கியமானவற்றை நோக்கி எப்போதும் சென்று, நம் கடமைகளை பொறுப்புணர்வுடன் எடுத்துக்கொள்ள இயேசு நமக்குக் கற்பிக்கிறார்' என,  இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதே நாளில், மொரோக்கோ நாட்டின் திருப்பீடத்திற்கான தூதுவர் Mostafa Arrifi அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து, தன் நம்பிக்கைச் சான்றிதழ்களை சமர்ப்பித்து, திருப்பீடத்திற்கான தூதுவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

மேலும், இத்திங்களன்று காலை, எருசலேமின் தத்துவியலாளரும், ஆன்மீக வல்லுனருமாகிய யூத மத குரு Adin Even-Israel Steinsaltz அவர்களையும், அமெரிக்க எழுத்தாளரும் சமூக நடவடிக்கையாளருமான George Weigel அவர்களையும் திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.