2016-11-30 16:13:00

ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு ஹவானாவில் மிகப் பெரிய பேரணி


நவ.30,2016. நவம்பர் 25, கடந்த வெள்ளிக்கிழமை, தனது 90-வது வயதில் காலமான கியூபாவின் புரட்சிகரத் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில், ஒரு மிகப் பெரிய பேரணி, கியூபாவின் தலைநகர் ஹவானாவில், இச்செவ்வாயன்று நடைபெற்றது.

ஃபிடல் காஸ்ட்ரோ, மற்றும் ஏனைய புரட்சிகர தலைவர்களின் போராட்டங்களை விளக்கும் பழைய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டும், கியூபாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டும், இந்தப் பேரணி நிகழ்வு தொடங்கியது.

வெனிசுவேலா அதிபர், நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) மற்றும் பொலிவியா அதிபர் ஈவோ மொராலெஸ் (Evo Morales) ஆகியோர் உள்ளிட்ட, பல நாடுகளின் தலைவர்கள், இந்த பேரணி நிகழ்வுக்காக, ஹவானாவில் உள்ள புரட்சி சதுக்கத்தில், பல ஆயிரக்கணக்கான கியூபா மக்களுடன் இணைந்தனர்.

ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சிக்காலத்தில் கியூபாவில் நிலவிய சர்ச்சைக்குரிய அரசியல் மற்றும் மனித உரிமை செயல்பாடுகள் காரணமாக, அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, பல மேலை நாடுகள், தங்கள் அரசின் சார்பாக, கீழ் நிலை அதிகாரிகளையே கியூபாவுக்கு அனுப்பவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் இறுதி ஊர்வலம், டிசம்பர் 4, ஞாயிறன்று நடைபெறும்.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.