2016-11-29 15:22:00

நாகசாகியில், கத்தோலிக்கரும் லூத்தரன் சபையும் இணைந்து விழா


நவ.29,2016. லூத்தரன் சீர்திருத்த சபை ஆரம்பிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவை, ஜப்பான் கத்தோலிக்க ஆயர் பேரவையும், ஜப்பான் இவாஞ்சலிக்கல் லூத்தரன் சபையும் இணைந்து சிறப்பிப்பதற்கு இசைவு தெரிவித்துள்ளன.

2017ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, நாகசாகி நகரத்திலுள்ள, மிகப் பழமையான உராக்காமி பேராலயத்தில், இந்த 500ம் ஆண்டு நிறைவை சிறப்பிக்க, ஜப்பான் கத்தோலிக்க ஆயர் பேரவையும், ஜப்பான் இவாஞ்சலிக்கல் லூத்தரன் சபையும் இசைவு தெரிவித்துள்ளன.

ஜப்பான் ஆயர் பேரவையின் உதவித் தலைவரான, நாகசாகி பேராயர் Mitsuaki Takami,  ஜப்பான் இவாஞ்சலிக்கல் லூத்தரன் சபையின் உதவித் தலைவர் அருள்திரு Joji Oshiba, ஆகிய இருவரும், இம்மாதத்தில், ஜெர்மன் அரசுத்தலைவர் Joachim Gauck அவர்களைச் சந்தித்து, இந்த 500ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களுக்கு, ஒத்துழைப்பு வழங்குமாறு விண்ணப்பிக்கும் மனு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.

மேலும், ஜப்பானில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக, மிகக் கொடூரமான அடக்குமுறைகள் இடம்பெற்றதன் 150ம் ஆண்டு நிறைவு, 2017ம் ஆண்டில் கடைப்பிடிக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.