2016-11-29 13:21:00

திருவருகைக்காலச் சிந்தனை - யார் மனிதர்?


மனிதர் என்பவர் யார்? பிறருக்காக கண்ணீரும், தேவைப்பட்டால் செந்நீரும் சிந்துபவர் எவரோ அவரே மனிதர் என்ற பொருள்கொண்ட பாடலை பலமுறை கேட்டிருக்கின்றோம். இன்று, இயேசு, “வாருங்கள், உங்களை, மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்கிறார். இயேசு தன் சீடர்கள் நால்வரையும், அவர்கள் அன்றாடம் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று அழைக்கின்றார். அவர்களுக்கு ஒரு பணியும் தரப்படுகின்றது. பழையதிலிருந்து புதியதாக.

இன்றும் இயேசு நம்மைச் சந்திக்கின்றார், ஆலயத்தில் மட்டுமல்ல, அன்றாட வேலைகளிலும். நாம் அவரை கண்டுகொள்கிறோமா? அவரது வார்த்தைகளைச் செவி கொடுத்து கேட்க, நம் மனது தயார் நிலையில் உள்ளதா? நமது வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கின்றதா?

பிறரின் கண்ணீரிலும், பிறரின் நலனுக்காக, செந்நீரிலும், பங்கெடுக்கும் நல்ல மனிதர்களாகவும், இச்சமூகத்தில், இறையாட்சியின் விழுதுகளாகவும், நாம் உருமாற, தயார் நிலையில் இருக்க, இத்திருவருகை காலம் நம்மை உருமாற்றட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.