2016-11-28 16:38:00

இறைவனைக் கண்டடைய, பெரிய கோட்பாடுகள் தேவையில்லை


நவ.28,2016. இறைவனை நாம் எவ்வாறு சந்திப்பது, அவரைச் சந்திப்பதற்கு நம் இதயங்களை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து, இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விழிப்புடன் செபித்தல், சகோதரத்துவ பிறரன்பு நடவடிக்கைகளில் ஈடுபடல், இறைவனைப் புகழ்தல் போன்றவை வழியாக, நாம் முன்னோக்கிச் சென்று, இறைவனைச் சந்திக்க முடியும் என, இத்திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் நம் தேடலில் நின்றுவிடாமல், நம்மைத் தேடிக்கொண்டிருக்கும் இறைவனை நோக்கி அடியெடுத்து வைக்கும்போது, பெரும் வியப்புக்களைக் கண்டுகொள்வோம் என்று கூறினார்.

நாம் ஓரடி எடுத்து வைக்கும்போது, நம்மேல் கொண்ட அன்பால், நம்மைத் தேடிக் கொண்டிருக்கும் இறைவன், பத்து அடிகளை எடுத்து வைக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, இறைவனைக் கண்டடைய, பெரிய கோட்பாடுகள் தேவையில்லை, மாறாக, விசுவாசம் ஒன்றே போதும் எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.