2016-11-24 16:37:00

திருத்தந்தை வழங்கும் இராட்சிங்கர் அறக்கட்டளை விருது


நவ.24,2016. நவம்பர் 24, இவ்வியாழன் முதல், 26 வருகிற சனிக்கிழமை முடிய, இராட்சிங்கர் அறக்கட்டளை, உரோம் நகரின் திருச்சிலுவை பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை நடத்திவருகிறது.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள இராட்சிங்கர் அறக்கட்டளை நடத்தும் இக்கருத்தரங்கிற்கு, "இறுதி வருகை: பகுப்பாய்வும், கண்ணோட்டமும்" என்ற தலைப்பு, மையக்கருத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக், கலாச்சார திருப்பீட அவையின் தலைவர், ஜியான்பிராங்கோ இரவாசி, உரோம் யூத மதத் தலைவர் ரிக்கார்தோ தி சேங்னி ஆகியோர் இக்கருத்தரங்கில் பங்கேற்க அழைக்கப்பெற்றுள்ளனர்.

இக்கருத்தரங்கின் இறுதிநாளான சனிக்கிழமையன்று, இராட்சிங்கர் அறக்கட்டளை தெரிவு செய்துள்ள Inos Biffi என்ற கத்தோலிக்க அருள்பணியாளருக்கும், Ioannis Kourempeles என்ற கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பணியாளருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டுக்கான இராட்சிங்கர் விருதினை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.