2016-11-21 17:08:00

திருத்தந்தைக்காக பங்களாதேஷ் காத்திருக்கிறது


நவ.21,2016. 2017ம் ஆண்டில், திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்திற்காக பங்களாதேஷ் நாடு காத்திருப்பதாகவும், அவரின் திருத்தூதுப் பயணத்தால், மதங்களிடையே உறவு பலப்படும் எனவும் கூறினார், அந்நாட்டின் புதிய கர்தினால், பேட்ரிக் டி ரொசாரியோ.

திருத்தந்தையின் வரவால் பங்களாதேஷ் தலத்திருஅவை புது இரத்தத்தைப் பெறுவதுடன், மதங்களிடையே இணக்க வாழ்வுக்கும், அரசு ஊழியர்களின் உரிமைகளுக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் அது உதவுவதாக இருக்கும் என்றார், இச்சனிக்கிழமையன்று கர்தினாலாக உயர்த்தப்பட்ட டாக்கா பேராயர் பேட்ரிக் டி ரொசாரியோ.

அண்மைக்காலங்களில் வன்முறை நடவடிக்கைகளால் துன்புறும் பங்களாதேஷ் நாட்டிற்கு, திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம், சமூக இணக்க வாழ்வுக்கு உதவும் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார், புதிய கர்தினால்.

ஆதாரம் : CNA /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.