2016-11-19 17:03:00

குடியேற்றதாரரின் இறப்பு கடந்த ஆண்டை விட 1000 அதிகரிப்பு


நவ.19,2016. இந்த ஆண்டு இதுவரை கடல்வழி பயணத்தில் இறந்த அல்லது காணாமல்போன குடியேற்றதாரரின் எண்ணிக்கை, 4600க்கும் அதிகமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் ஏற்பட்ட இறப்பை விட, இந்த ஆண்டு 1000 பேர் அதிகமாக இறந்துள்ளனர்.

கடந்த மூன்று நாள்களாக மத்திய தரைக் கடலில் 350-க்கு மேலான குடியேற்றதாரர் இறந்துள்ளதாக, அல்லது, காணாமல் போயுள்ளதாக, அனைத்துலக குடியேற்றதாரர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு வருவதற்கு கடல் கடந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட பெரும்பாலான ஆப்ரிக்கர்கள்தான், சமீபத்திய இந்த முயற்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக, இத்தாலியிலுள்ள சர்வதேச குடியேற்றதாரர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் :  Tamil win/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.