2016-11-16 16:52:00

நிலத்தடி எரிசக்தியின் பயன்பாட்டை நிறுத்த COP22ல் விண்ணப்பம்


நவ.16,2016. பூமிக்கடியிலிருந்து உறுஞ்சி எடுக்கப்படும் எரிசக்தியின் பயன்பாட்டை நிறுத்தவேண்டும் என்று, 220க்கும் அதிகமான சமயத் தலைவர்கள், மொரோக்கோவில் நடைபெறும் பன்னாட்டு கூட்டத்தில் பங்கேற்றுவரும் உலகத் தலைவர்களிடம் விண்ணப்பித்துள்ளனர்.

மொரோக்கோ நாட்டின், மராக்கேஷ் நகரில், நவம்பர் 7 கடந்த திங்கள் முதல், 18, வருகிற வெள்ளி முடிய நடைபெற்றுவரும், ஐ.நா.வின் காலநிலை மாற்றம் குறித்த இரண்டாவது அமர்வில் (COP22) பங்கேற்றுவரும் உலகத்தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த விண்ணப்பத்தில், பாப்பிறை சமுதாய இயல் அமைப்பின் தலைவர், ஆயர் Marcelo Sánchez Sorondo, உலக கிறிஸ்தவ சபைகள் கழகத்தின் பொதுச் செயலர், Olav Fykse Tveit, ஆங்கிலிக்கன் பேராயர், Desmond Tutu, வட அமெரிக்க இஸ்லாமியக் கழகத்தின் தலைவர், Sayyid M. Syeed ஆகியோர் உட்பட, பல்வேறு சமயத் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

நமக்கு வழங்கப்பட்டுள்ள இயற்கையை பாதுகாத்து, மேம்படுத்தி, அடுத்தத் தலைமுறைக்கு வழங்குவதே உலகத் தலைவர்களின் முதன்மையானக் கடமை என்பதை, COP22 கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைத்து பிரதிநிதிகளும் உணரவேண்டும் என்று, பல்சமயத் தலைவர்களின் விண்ணப்பம் அழைப்பு விடுக்கிறது.

மராக்கேஷ் நகரில் நடைபெற்றுவரும் COP22 மாநாட்டில், 192 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.