2016-11-12 15:15:00

நிமோனியா,வயிற்றுப்போக்கு நோய்களால்14 இலட்சம் சிறார் மரணம்


நவ.12,2016. மத்திய மற்றும் மிகவும் வருவாய் குறைந்த நாடுகளில், நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களால், ஒவ்வோர் ஆண்டும், ஏறக்குறைய 14 இலட்சம் சிறார் இறக்கின்றனர் என்று, யூனிசெப் நிறுவனம் கூறியுள்ளது.

ஐ.நா.வின் உலக காலநிலை மாநாட்டிற்கென, உலகத் தலைவர்கள், மொரோக்கோ நாட்டின் மராக்கேசில் கூடியபோது, சிறார் இறப்பு குறித்த இவ்வறிக்கையை வெளியிட்டது யூனிசெப் நிறுவனம்.  

இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து இதுவரை, நிமோனியாவால், ஏறக்குறைய 3 கோடியே 40 இலட்சம் சிறார் இறந்துள்ளனர், இதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில், 2030ம் ஆண்டுக்குள், மேலும் 2 கோடியே 40 இலட்சம் சிறார் இறக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது யூனிசெப்.

ஆதாரம் : UN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.