2016-11-07 15:54:00

மிக அதிக உயரமுடைய கிறிஸ்துமஸ் மரம் இலங்கையில்


நவ.07,2016. இலங்கையில் மத நல்லிணக்கத்திற்கு உதவும் நோக்கில், உலகிலேயே மிக உயரமான செயற்கை கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை அமைக்க உள்ளதாக அந்நாட்டின் அமைச்சர் ஒருவரும் துறைமுகத் துறையின் கத்தோலிக்க அமைப்பும் இணைந்து அறிவித்துள்ளன.

காடுபோன்ற ஒரு சூழலை செயற்கையாக உருவாக்கி அதில் 6 மீட்டர் உயரமுடைய கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை நிறுத்தி, அதன் அருகே 114 மீட்டர் உயரமுடைய செயற்கை கிறிஸ்துமஸ் மரத்தை அமைக்க உள்ளதாக அமைச்சர் அர்ஜுனா இரணதுங்காவின் துறைமுக நல ஆதரவு அமைப்பும், துறைமுக கத்தோலிக்க அமைப்பும் தெரிவித்துள்ளன.

கின்னஸ் சாதனையாக அமைக்கப்பட உள்ள இந்த கிறிஸ்துமஸ் மரத்தில் 5 இலட்சம் வண்ண விளக்குகளும் பொருத்தப்பட உள்ளன.

2009ம் ஆண்டு மெக்சிகோவில் நிறுவப்பட்ட 90 மீட்டர் உயர கிறிஸ்துமஸ் மரமே இதுவரை, அதிக உயரமுடையதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.