2016-10-25 15:46:00

நேபாள திரு அவையில் அன்னை தெரேசாவை சிறப்பிக்கும் விழா


அக்.25,2016. கடந்த மாதம் 4ம் தேதி, அன்னை தெரேசா அவர்கள் புனிதராக அறிவிக்கப்பட்ட நிகழ்வை, கடந்த வார இறுதியில் சிறப்பித்தது நேபாள திரு அவை.

நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள மரியின் விண்ணேற்பு ஆலயத்தில் இடம்பெற்ற இந்தக் கொண்டாட்டங்களில் கத்தோலிக்கர்களுடன் பிற மதத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கொண்டாட்டங்களின்போது, அன்னை தெரேசா பிறரன்பு சபை கன்னியர்களுக்கு தன் நன்றியையும் பாராட்டுக்களையும் வெளியிட்ட நேபாள ஆயர் Paul Simick அவர்கள், அன்னை தெரேசாவுக்குப்பின் அச்சபையைத் தலைமை தாங்கி வழி நடத்தியவர், நேபாள இந்து குடும்பத்தைச் சேர்ந்த அருள்சகோதரி நிர்மலா என்பதையும் நினைவூட்டினார்.

1978ம் ஆண்டிலிருந்தே நேபாளத்தில் சேவையாற்றிவரும் அன்னை தெரேசா சபையினர், காத்மண்டுவிலுள்ள இந்து கடவுளான பசுபதி பெயரிலான புனித தல வளாகத்தில் உள்ள ஓர் இல்லத்தில், முதியோர் மற்றும் இறக்கும் நிலையில் உள்ளோருக்காக பணியாற்றி வருகின்றனர்.

ஆதாரம் :  UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.