2016-10-21 15:46:00

குடியிருப்பு குறித்த ஐ.நா. கூட்டத்தில் பேராயர் அவுசா


அக்.21,2016. அனைத்து மனிதரும், மாண்புடனும், குடும்பத்தை அமைக்கவும் தேவையான அடிப்படை ஆன்மீக மற்றும் பொருளாதார வசதிகள் வழங்கப்படுவதற்கு, எல்லா அரசுகளும் உறுதியளிக்குமாறு, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், ஐ.நா. கூட்டம் ஒன்றில் விண்ணப்பித்தார்.

ஈக்குவதோர் நாட்டின் குய்ட்டோவில் நடந்த, குடியிருப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி குறித்த, ஐ.நா. கூட்டத்தில், இவ்வியாழனன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் அவுசா அவர்கள், ஒவ்வொரு மனிதரின் அடிப்படை, ஆன்மீக மற்றும் பொருளாதார தேவைகளை விவரித்தார்.

குடியிருப்பு, வேலை, நிலம் ஆகியவை, அடிப்படை பொருளாதார தேவைகள் என்றும், சமய சுதந்திரம், கல்வி கற்பதற்கு உரிமை, மற்ற எல்லாவித குடியுரிமைகள் உள்ளிட்ட ஆன்மீகச் சுதந்திரத்தை, ஆன்மீகத் தேவைகள் என்றும், விவரித்தார் பேராயர் அவுசா.

2030ம் ஆண்டின் வளர்ச்சித் திட்ட இலக்குகள் அமல்படுத்தப்படுகின்றனவா என்று மதிப்பீடு செய்வதற்கு, குடியிருப்பு, மாண்புடன்கூடிய வேலைவாய்ப்பு, போதுமான உணவு, குடிநீர் போன்றவை கிடைக்கின்றனவா என்று ஆராய்ந்தாலே போதுமானது என்றும் தெரிவித்தார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.