2016-10-18 14:37:00

இது இரக்கத்தின் காலம் : குழந்தை வதைப்படலம்


வீட்டுத் தலைவி ஒருவர், தன் வீட்டிற்கு வந்திருந்த தோழியிடம் பேசிக்கொண்டிருந்தார். அருகில் TV ஓடிக்கொண்டிருந்தது. அதில், பிரபலமான ஒரு நடிகை, கவர்ச்சிகரமாக ஆடிக்கொண்டிருந்தார். வீட்டுத்தலைவி தன் தோழியிடம், "என் மகளும் இதேமாதிரி ஆடுவா" என்று கூறி பெருமைப்பட்டார். அந்நேரம், பள்ளியிலிருந்து திரும்பி வந்தாள், LKG படிக்கும் அக்குழந்தை. ஆர்வமாய் அம்மாவிடம் போய், "அம்மா, இன்னைக்கி ‘ஸ்கூல்’ல ஒரு புது ‘ரைம்’ சொல்லித் தந்தாங்க" என்று சொல்லி, அந்த ‘ரைமை’ச் சைகையோடு செய்து காட்டினாள். அம்மாவும், தோழியும் கைதட்டிப் பாராட்டினர். பிறகு, அம்மா மகளிடம், "அந்த ‘டான்ஸ்’ ஆடும்மா." என்று சொல்லி TVயில் ஓடிக்கொண்டிருந்த பாடலைக் காட்டினார். மகளோ, "’சினிமா டான்ஸ்’ வேண்டாம்மா. இன்னொரு ‘ரைம்’ சொல்றேன்" என்றாள். தன் தோழிக்கு முன்னால், மகள், ‘சினிமா டான்ஸ்’ ஆடவில்லை என்கிற வருத்தம், கோபம் அம்மாவுக்கு. "’ரைம்’ எல்லாம் ஒன்னும் வேணாம். இந்த ‘டான்ஸ்’ ஆடு" என்று மீண்டும் வற்புறுத்தினார் அம்மா.

குழந்தைகள், அவர்கள் உலகத்தில் சுதந்திரமாய் பறந்து திரிவதைத் தடுத்து, அவர்களை, நம் உலகத்திற்கு பலவந்தமாக இழுத்து வந்து, கட்டிப்போடும் முயற்சி இது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.