2016-10-17 17:08:00

சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் நிறுத்தப்படவேண்டும்


அக்.17,2016. பிலிப்பீன்ஸ் நாட்டில், போதைப்பொருளைப் பயன்படுத்துவோர், மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர், தொடர்ந்து சட்டத்திற்குப் புறம்பாக கொலை செய்யப்பட்டுவருவது, உடனடியாக நிறுத்தப்படவேண்டுமென்று அந்நாட்டு ஆயர் பேரவையின் சமுதாய செயல்பாட்டு அவை அழைப்பு விடுத்துள்ளது.

"வாழ்வின் மாண்பை மதித்தல்" என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இவ்வவை, குற்றம் புரிவோர், சட்டத்திற்குப் புறம்பாக அரசாலேயே கொலை செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளது.

இவ்வாண்டு ஜூன் மாதம் 30ம் தேதி, ரொட்ரிகோ துத்தெர்தே (Rodrigo Duterte) அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டின் புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து, இதுவரை, போதைப்பொருள் பயன்பாட்டாளர் மற்றும் வர்த்தகர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், ஏறத்தாழ 4000 பேருக்கும் அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்று UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.