2016-10-14 16:52:00

புலம்பெயர்ந்துள்ள மக்களை மாண்புடன் நடத்த அழைப்பு


அக்.14,2016. பாப்புவா நியு கினி கடல் பகுதியிலுள்ள நவ்ரு மற்றும் மானுஸ் தீவுகளில், தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்துள்ள மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு, ஆஸ்திரேலிய பேராயர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

போர், அடக்குமுறை அல்லது வறுமையினால், தங்கள் நாடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறி, புகலிடம் தேடும் மக்கள், தடுப்பு முகாம்களில் வைக்கப்படுவது மற்றும் திருப்பி அனுப்பப்படுவது குறித்த தனது கவலையை வெளியிட்டுள்ளார் ஆஸ்திரேலிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Denis Hart.

நவ்ரு மற்றும் மானுஸ் தீவுகளில், தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்துள்ள மக்கள், ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற, உலகளாவிய விண்ணப்பங்களுக்கு, ஆயர்கள் ஆதரவளிப்பதாக, பேராயர் Hart தெரிவித்துள்ளார்

தடுப்பு முகாம்களில் புலம் பெயர்ந்துள்ள மக்கள் நடத்தப்படும் முறை, கவலையளிக்கின்றது என்றும், அம்மக்கள் மாண்புடன் நடத்துப்படுமாறும் ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தியுள்ளார் பேராயர் Hart.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.