2016-10-11 16:52:00

தென் கொரியப் பல்கலைக்கழக மாணவர்கள் தெருக்களில் நற்செய்தி


அக்.11,2016. தெருக்களில் நற்செய்தி அறிவியுங்கள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, தென் கொரியாவில், பல்கலைக்கழக மாணவர்கள், தெருக்களில் நற்செய்தி அறிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

“இளையோரே, விழித்தெழுங்கள்! தூங்குபவர்கள் நடனமாட இயலாது” என்ற கருப்பொருளுடன், நகரின் மையங்களில், இளையோர், தங்களின் விசுவாசத்தைப் பெருமையுடன் அறிவித்து வருகின்றனர் என்று, Zenit செய்தி நிறுவனம் கூறியது.

தெருக்களில் நற்செய்தி அறிவிப்பதை, உண்மையிலேயே நடைமுறைப்படுத்தும் விதமாக, செயோல் கத்தோலிக்க மாணவர் கூட்டமைப்பு கடந்த வார இறுதியில், 2வது அமைதி(PAX) விழாவைச் சிறப்பித்தது.

ஆசிய இளையோர் தினத்திற்காக, 2014ம் ஆண்டில், திருத்தந்தை தென் கொரியா சென்றபோது, “விழித்தெழுங்கள் மற்றும் முன்னோக்கிச் செல்லுங்கள்! தூங்குபவர்கள், பாடவோ, நடனமாடவோ அல்லது அகமகிழவோ இயலாது” என்று இளையோர்க்குக் கூறியதன் பலனாக, தென் கொரிய இளையோர், PAX விழாவைச் சிறப்பித்து வருகின்றனர். இந்த PAX விழா, 2015ம் ஆண்டில் முதன்முறையாகச் சிறப்பிக்கப்பட்டது.

ஆதாரம் : Zenit /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.