2016-10-08 16:06:00

புதிய ஐ.நா.பொதுச்செயலராக முன்மொழியப்பட்டுள்ளவர்


அக்.08,2016. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அவை, ஐ.நா.வின் புதிய பொதுச்செயலராக, போர்த்துக்கீசிய நாட்டு கத்தோலிக்கர் மற்றும் மனித உரிமை ஆர்வலரான António Guterres அவர்களை முன்மொழிந்துள்ளது.

ஐ.நா.வின் 9 வது பொதுச்செயலராக, ஐ.நா. பாதுகாப்பு அவை நியமித்துள்ள, 67 வயது நிரம்பிய Guterres அவர்கள், 1995ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை, போர்த்துக்கல் நாட்டின் பிரதமராகப் பணியாற்றியவர்.

2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை, ஐ.நா. புலம்பெயர்ந்தவர் நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றிய Guterres அவர்கள், அச்சமயத்தில், அந்நிறுவனத்தின் நிர்வாகத்தைச் சீரமைத்தவர்.

António Guterres அவர்களின் நியமனத்தை, 193 உறுப்பினர்கள் அடங்கிய ஐ.நா. பொது அவை அங்கீகரிக்க வேண்டும் என்பது ஐ.நா. விதிமுறையாகும். இந்நடவடிக்கை, அக்டோபர் 13ம் தேதி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா. பொது அவையால், Guterres அவர்கள் அங்கீகரிக்கப்பட்டால், ஐ.நா.வின் புதிய பொதுச்செயலராக, 2017ம் ஆண்டு சனவரி முதல் தேதி இவர் பணியைத் தொடங்குவார்.

Guterres அவர்கள், போர்த்துக்கல் நாட்டின் பிரதமராகப் பணியாற்றியபோது, கருக்கலைப்பு மற்றும் ஓரினத் திருமணம், சட்டத்தின்படி அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தினார்.

ஆதாரம் : Agencies/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.