2016-10-03 16:34:00

இந்தியாவில் 'கல்வியைக் காவிமயமாக்கும்' முயற்சிக்கு எதிர்ப்பு


அக்.03,2016. இந்தியாவின் கல்விக் கொள்கையில் மாற்றங்களைக் கொணர்வதற்கு முயலும் மத்திய அரசு, அந்த முயற்சியில் கிறிஸ்தவ பிரதிநிதிகளைக் கலந்தாலோசிக்கவேண்டும் என்று, இந்திய ஆயர் பேரவையின் தலைமைச் செயலர், ஆயர் தியடோர் மாஸ்கரீனஸ் அவர்கள் கூறினார்.

இந்தியாவில் 'கல்வியைக் காவிமயமாக்கும்' முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டுமென்ற கோரிக்கையுடன், கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமியப் பிரதிநிதிகள் குழுவொன்று, மனிதவள அமைச்சர், பிரகாஷ் ஜவடேக்கர் (Prakash Javadekar) அவர்களை, அண்மையில் சந்தித்தது.

இப்பிரதிநிதிகள் குழுவில் ஒருவரான ஆயர் மாஸ்கரீனஸ் அவர்கள், சமமான வாய்ப்புக்களை தன் சட்டத்தில் கொண்டுள்ள இந்திய சட்டங்களை, கல்வித் துறை மதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் 15 பிரதமர்களில், 9 பேரும், 13 அரசுத் தலைவர்களில், 11 பேரும், கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் பயின்றவர்கள் என்பதால், இந்திய முன்னேற்றத்திற்கு, கிறிஸ்தவ கல்வி நிலையங்களும் அதேவண்ணம், இஸ்லாமிய கல்வி நிலையங்களும் ஆற்றியுள்ள பங்கை மறக்க இயலாது என்று, கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமியப் பிரதிநிதிகள் குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.