2016-10-02 15:19:00

அசர்பைஜானில் மிக் சிறிய கத்தோலிக்க சமூகத்தைச் சந்தித்தது..


அக்.02,2016. இலட்சக்கணக்கான மக்களைக் கொண்ட ஒரு நாட்டில், 700 பேரைக் கொண்ட ஒரு சிறிய கத்தோலிக்க சமூகத்தைச் சந்திப்பதற்கு, திருத்தந்தை இவ்வளவு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து தன் நேரத்தை வீணாக்க வேண்டுமா என, சிலர் நினைக்கலாம். அதிலும், இந்தச் சிறிய கத்தோலிக்க சமூகம், Azeri, இத்தாலியம், ஆங்கிலம், இஸ்பானியம், இப்படி பல மொழி பேசும் மக்களைக் கொண்டுள்ளது. இது ஒதுக்குப்புறத்தில் வாழும் ஒரு சமூகம். ஆயினும், திருத்தந்தை இதில் தூய ஆவியாரைப் பின்பற்றுகிறார். அன்று எருசலேம் மாடியறையில், கதவுகளைப் பூட்டிக்கொண்டிருந்த சிறிய, ஒதுங்கியிருந்த ஒரு குழு மீது, தூய ஆவியார் விண்ணிலிருந்து இறங்கி வந்தார். நசுக்கப்படுவோம் என்று பயந்துகொண்டிருந்த அந்தக் குழுவுக்கு, தூய ஆவியார் துணிச்சலையும், சக்தியையும், தந்து, இயேசுவின் பெயரால் நற்செய்தி அறிவிக்கத் தூண்டுகிறார். பின்னர், அச்சம் அல்லது வெட்கத்தால், மூடிய அறைக்குள் இருந்த அந்த எருசலேம் குழுவின் கதவுகள் அகலத் திறந்தன. தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தன. தூய ஆவியார் அந்நேரத்தில் ஆற்றியதுபோன்று, திருத்தந்தையும், நேரத்தை வீணாக்கினார். இரு காரியங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று, அந்தக் குழுவில் அன்னை மரியா இருந்தார். நம் அன்னையை மறக்காதீர்கள். மேலும், அந்தக் குழுவில் பிறரன்பு இருந்தது. தூய ஆவியார் அக்குழுவினர்மீது பொழிந்த உடன்பிறப்பு அன்பு இருந்தது. எனவே துணிச்சல் கொள்ளுங்கள்!. முன்னோக்கிச் செல்லுங்கள்!. அச்சமின்றி முன்னோக்கிச் செல்லுங்கள்! என்று, பக்கு நகரில், திருப்பலிக்குப் பின்னர் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.