2016-10-01 11:31:00

இது இரக்கத்தின் காலம் – அக்டோபர் 2, வன்முறையற்ற உலக நாள்


அக்டோபர் 2, இஞ்ஞாயிறன்று, மகாத்மா காந்தி பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். இதே நல்ல நாளில், மற்றொரு கண்ணியமான அரசியல் தலைவர், லால் பகதூர் சாஸ்திரி அவர்களும் பிறந்துள்ளார். இதே அக்டோபர் 2ம் தேதி, கர்மவீரர் காமராஜ் அவர்கள், இறந்த நாள். அரசியல் என்ற சொல்லுக்கே ஒரு புனிதமான அர்த்தம் தந்தவர்கள் இவர்கள். ஆனால், இன்று, அரசியல் என்றதும், அராஜகம், அடாவடித்தனம், வன்முறை இவையே, இச்சொல்லுக்கு இலக்கணமாகி வருவது, வேதனையைத் தருகிறது.

1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி, காந்தி பிறந்தபோது, அகிம்சையும் அவருடன் இணைந்து இரட்டைப் பிறவியாகப் பிறந்ததோ என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. காந்தி என்றதும், உலகம் முழுவதும், அகிம்சையும் அதே மூச்சில் பேசப்படுகிறது. எனவே, 2007ம் ஆண்டு ஐ.நா.பொது அவை அக்டோபர் 2ம் தேதியை, அகில உலக வன்முறையற்ற நாள் என்று அறிவித்துள்ளது. வன்முறையற்ற உலக நாளை உருவாக்கிவிட்டு, அதனை உலகெங்கும் நிஜமாக்க முடியாமல் நாம் தவிக்கிறோம்.

வன்முறையற்ற உலகம் உருவாக, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், சிறப்பாக செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.