2016-09-28 15:23:00

இது இரக்கத்தின் காலம்... – தீமைகளுக்கிடையே ஒப்பீடு


ஓர் ஓடக்காரர், ஆற்றைக் கடக்க கொள்ளைப் பணம் வசூலித்து வந்தார். மக்கள் திட்டுவதையெல்லாம் அவர் கண்டு கொள்வதில்லை. மக்களும் வேறு வழியின்றி அவர் கேட்கிற பணத்தைக் கொடுத்து, ஆற்றைக் கடந்து செல்வார்கள். அவர் நோய்வாய்ப்பட்டார். இவனுக்கு நற்கதியே கிடைக்காது என்று மக்கள் தூற்றினார்கள். இறக்கும் தறுவாயில் தன் மகனை அழைத்த ஓடக்காரர், "மகனே, நான் உயிரோடு இருக்கையில் செய்த செயல்களுக்காக இப்பொழுது வருத்தப்படுகிறேன். மக்கள் ஒருவரும் என்னை நல்லவிதமாகச் சொல்லியதே இல்லை. ஏச்சும் பேச்சும்தான் கேட்டிருக்கிறேன். இறந்த பின்னராவது மக்கள் என்னை நல்ல விதமாகப் பேசும்படி செய்" என்று கூறி உயிர்விட்டார்.

மகனும் யோசித்தான். தந்தை பார்த்த தொழிலையே அவனும் கைக்கொண்டு தந்தையை விட இரண்டு மடங்கு பணம் வசூலித்தான். இப்பொழுது மக்கள் சொன்னார்கள்: "இவனுக்கு இவன் தந்தை எவ்வளவோ மேல். பாவம் புண்ணியவான், அதுக்குள்ள போய்ச் சேர்ந்துட்டான்" என்று.

நல்லவைகள் அருகிவருவதால், தீயவைகளுக்குள்ளேயே ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளது எவ்வளவு கொடுமை!.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.