2016-09-27 15:10:00

இது இரக்கத்தின் காலம் : 'பசித்திருப்போருக்கு விடுதலை வழங்க'


'பசியிலிருந்து விடுதலை பெறும் நாள்' (Freedom from Hunger Day), செப்டம்பர் 28, இப்புதனன்று சிறப்பிக்கப்படுகிறது. இத்தருணத்தில், பசியைப் பற்றி சொல்லப்பட்டுள்ள இரு பொன்மொழிகள் இதோ:

"பசியிலிருந்து விடுதலை பெறுதல் என்பது, அரைகுறையாக இருக்கும்வரை, உலக நாடுகளில் மூன்றில் இரண்டு, உணவு பற்றாக்குறையுடன் இருக்கும்வரை, எந்த நாடும், எந்தக் குடிமகனும் திருப்தியடைய முடியாது. உலகிலிருந்து பசியை விரட்டியடிக்க, மனித குலத்தின் உறுப்பினர்கள் என்ற முறையில், நம்மிடம் திறமை உள்ளது, வழியும் உள்ளது. மனத்துணிவு மட்டுமே தேவைப்படுகிறது." – அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர், ஜான் கென்னடி (John F.Kennedy)

"நான் வறியோருக்கு உணவளிக்கும்போது, என்னை ஒரு புனிதர் என்று அழைக்கின்றனர். வறியோருக்கு உணவு ஏன் கிடைப்பதில்லை என்று நான் கேட்கும்போது, என்னை ஒரு கம்யுனிசவாதி என்று அழைக்கின்றனர்." – பிரேசில் நாட்டு பேராயர், ஹெல்டர் காமரா (Archbishop Hélder Câmara)

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், உடலளவில் நாம் ஆற்றக்கூடிய ஏழு இரக்கச் செயல்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கு நினைவுறுத்தியுள்ளார். பசியாய் இருப்போருக்கு உணவளிப்பது, அந்த ஏழு செயல்களில் ஒன்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.