2016-09-24 17:00:00

மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான சிறப்பு யூபிலி கொண்டாட்டங்கள்


செப்.24,2016. "நம் பொதுவான இல்லமான படைப்பையும், ஒருவர் மற்றவரையும் பாதுகாத்து, இணைந்து நடப்போம்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

மேலும், தற்போது திருவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் இரக்கத்தின் யூபிலி ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, இஞ்ஞாயிறன்று, சிறப்பிக்கப்படும் மறைக்கல்வி ஆசிரியர்கள் யூபிலியையொட்டி, திருப்பலியை நிறைவேற்றுகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 25, இஞ்ஞாயிறன்று, உரோம் நேரம் காலை 10. 30 மணிக்கு, அதாவது, இந்திய நேரம், பிற்பகல் 2 மணிக்கு, உரோம் நகரின் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை நிகழ்த்தும் இந்த யூபிலி திருப்பலி, உலகின் மறைக்கல்வி ஆசிரியர்களை இணைத்ததாக, அவர்களின் பங்கேற்போடு நடைபெறுகிறது.

இதற்கிடையே, வரும் நவம்பர் மாதம் 28 முதல் டிசம்பர் 4ம் தேதி வரை, இலங்கையின் கொழும்புவில் இடம்பெறவுள்ள FABC என்ற ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் 11வது நிறையமர்வுக் கூட்டத்திற்கு, தன் பிரதிநிதியாக, இந்தியாவின் இராஞ்சி பேராயர், கர்தினால் டெலஸ்போர் டோப்போ அவர்களை நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.