2016-09-23 14:34:00

இது இரக்கத்தின் காலம் : இலவசங்களை நம்பி வாழும் மக்கள்


புதிதாக ஒரு நாட்டிற்குள் வந்த புலவர் ஒருவர், அந்நாட்டு மன்னரிடம் தன் நாட்டு பெருமைகளை எடுத்துரைத்தார். "எங்கள் மன்னர் தானத்தில் சிறந்தவர், அவரது அரண்மனையில் காலையிலிருந்து மாலை வரை தான தர்மங்கள் நடந்து கொண்டிருக்கும். மக்கள் எந்நேரமும் வந்து பொருள் பெற்றுச் சென்ற வண்ணம் இருப்பர்" என்று சொன்னார். அதற்கு அந்த மன்னர், "அப்படி ஒரு மோசமான நிலையிலுள்ள நாட்டைப் பற்றி நான் கேட்கவே விரும்பவில்லை. நானும் தர்மங்கள் செய்யக் காத்திருக்கிறேன். ஆனால், என் மக்கள் யாரும் தானம் கேட்கும் நிலையில் இல்லை. இலவசங்களை நம்பி வாழும் நிலையில் என் மக்களை வைத்திருக்கவில்லை" என்றார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.