2016-09-16 16:12:00

இது இரக்கத்தின் காலம்: பிரச்சனை என்னவென முதலில் புரிந்துகொள்


ஓர் அரசன் தன் நான்கு முக்கிய அமைச்சர்களைக் கூப்பிட்டு அவர்களில் ஒருவரை முதலமைச்சராக நியமிக்கவிருப்பதாகவும் அதற்கு அவர் வைக்கும் தேர்வில் தேற வேண்டும் என்றும் கூறினார். தேர்வு இதுதான், கணித முறையில் அமைக்கப்பட்ட ஒரு பூட்டை, யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர். மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம் பற்றிய பல ஓலைச் சுவடிகளைப் படித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார். மறுநாள் காலை, அரசவையில் பூட்டு கொண்டு வரப்பட்டது. .பூட்டின் அமைப்பு, எல்லாருடைய படபடப்பையும் அதிகரித்தது. ஓலைச் சுவடிகளைக் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்கள் அவற்றை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள். ஆனால் அப்பூட்டைத் திறக்கும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை. இரவில் நன்கு தூங்கிய அமைச்சர், மெதுவாக எழுந்து வந்து, பூட்டை நன்கு ஆராய்ந்தார். கூர்ந்து கவனித்ததில், பூட்டு பூட்டப்படவே இல்லை என்பது அவருக்குப் புலனாயிற்று. சாவியே இல்லாமல், எந்த கணித சூத்திரமும் இல்லாமல், பூட்டை எளிதாக அவர் திறக்க, மன்னர் அவரையே முதலமைச்சர் ஆக்கினார்.

பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால், முதலில் பிரச்சனை என்னவென்பதை நன்கு புரிந்து கொள்ளவேண்டும். பிரச்சனையைப் புரிந்துகொள்ள, மனம் சமன் நிலையில் இருக்கவேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.