2016-09-14 17:14:00

ஜார்ஜியாவில் திருத்தந்தையை வரவேற்கும் கல்தேய ஆயர்கள்


செப்.14,2016. செப்டம்பர் 30, வெள்ளி முதல், அக்டோபர் 2, ஞாயிறு முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜார்ஜியா, அசர்பைஜான் நாடுகளில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின்போது, கல்தேய வழிபாட்டு முறையைச் சேர்ந்த ஆயர்களும், திருத்தந்தையை வரவேற்க Tbilisi நகருக்குச் செல்லவிருக்கின்றனர் என்று, பாபிலோனிய முதுபெரும் தந்தை, முதலாம் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.

செப்டம்பர் 21ம் தேதி முதல், 28ம் தேதி முடிய ஈராக் நாட்டின் எர்பில் நகரில் நடைபெறும் கல்தேய ஆயர் மாமன்றத்தில் கலந்துகொள்ளும் ஆயர்கள், இக்கூட்டத்திற்குப் பின், ஜார்ஜியாவின் Tbilisi நகருக்குச் சென்று, திருத்தந்தையை வரவேற்பர் என்று, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், பிதேஸ் (Fides) செய்தியிடம் கூறியுள்ளார்.

ஈராக் நாட்டில் நிலவும் கடிமான சூழலால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் நாட்டிற்கு வருவது தற்போது இயலாது என்பதால், கல்தேய சமுதாயத்தைச் சேர்ந்த நாங்கள், அவரைக் காண, Tbilisi நகருக்குச் செல்கிறோம் என்று, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

செப்டம்பர் 30ம் தேதி பிற்பகல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Tbilisi நகரில், அசீரிய, கல்தேய வழிபாட்டு முறையைப் பின்பற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சந்திப்பது, அவரது திருத்தூதுப் பயணத்தின் ஒரு நிகழ்வாக திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.