2016-09-14 17:50:00

Calais நகரில் சுவர் எழுப்பும் முயற்சிக்கு, காரித்தாஸ் கவலை


செப்.14,2016. பிரான்ஸ் நாட்டின் Calais நகரில் அமைந்துள்ள புலம் பெயர்ந்தோர் முகாமுக்கு அருகே சுவர் எழுப்பும் முயற்சி குறித்து, காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு தன் கவலையை வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து, பிரித்தானியாவுக்கு செல்லும் கால்வாய்க்கு அருகே அமைந்துள்ள Calais நகரில், பாதுகாப்பு கருதி இந்தச் சுவர் எழுப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாடு தன் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டாலும், சுவர்கள் எழுப்புவது, பாதுகாப்பை உறுதி செய்யும் என்ற நிச்சயம் கிடையாது என்று கூறும் காரித்தாஸ் அமைப்பு, சுவர் கட்டுமானத்திற்கு ஆகும் செலவை, அங்குள்ள புலம் பெயர்ந்தோரின் நல்வாழ்வுக்குப் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கூறியுள்ளது.

Calais நகரில் உள்ள புலம் பெயர்ந்தோர் முகாமில் தங்கியுள்ள 9000த்திற்கும் மேற்பட்டோருக்கு, நாளொன்றுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே வழங்கப்படுகிறது என்று, காரித்தாஸ் அமைப்பு தன் கவலையை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.