2016-09-12 16:49:00

காபோன் நாட்டிற்காக செபிக்குமாறு திருத்தந்தை


செப்.12,2016. அண்மைக் காலங்களில் அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கிவரும் ஆப்பிரிக்க நாடான காபோனுக்காக செபிக்குமாறு, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அனைவருக்கும் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

காபோன் நாட்டில் இடம்பெறும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் குடும்பங்களையும் இறைவனின் கைகளில் ஒப்படைப்பதாக தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறைகளைக் கைவிட்டு, பொதுநலனை மனதில் கொண்டு செயல்படுமாறு, போரிடும் துருப்புக்களை நோக்கி அந்நாட்டு ஆயர்களுடன் இணைந்து தான் அழைப்புவிடுப்பதாகத் தெரிவித்தார்.

அனைவரும், குறிப்பாக கத்தோலிக்கர்கள் அமைதியைக் கட்டியெழுப்புபவர்களாக, பேச்சுவார்த்தைகளிலும், சகோதரத்துவ நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டும் என தான் விண்ணப்பிப்பதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், கஜகிஸ்தான் நாட்டில் இறையடியார் Ladislaus Bukowinski, இஞ்ஞாயிறன்று அருளாளராக அறிவிக்கப்படடது குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.