2016-09-12 16:54:00

அன்னை தெரேசா சிலை வேளாங்கண்ணியில் திறப்பு


செப்.12,2016.  வேளாங்கண்ணி திருத்தலத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே, அன்னை தெரேசா பெயரில், புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் விடுதியையும், அன்னை தெரேசாவின் திருவுருவச் சிலையையும், தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள் திறந்து வைத்தார்.

கொல்கத்தாவில் உள்ள புனித மரியாள் பள்ளியில், புவியியல் ஆசிரியை பணியை, அன்னை தெரேசா அவர்கள் செப்டம்பர் 10ம் தேதியன்று துவக்கியதை நினைவுகூரும் விதமாக, கடந்த சனிக்கிழமையன்று அவரது சிலை திறந்து வைக்கப்பட்டது.

இச்சிலை திறப்பு விழாவுக்கு முன்னதாக, வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பாக, ஆரோக்கிய அன்னை தேவாலய முகப்பில் இருந்து, அன்னை தெரேசா அவர்களின் திருவுருவச் சிலை, வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

நிகழ்ச்சியில் ஏராளமான அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பயணிகள் தங்கும் இலவச விடுதியில், அன்னை தெரேசா அவர்களின் பெயரில், சனிக்கிழமைதோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Dinamalar/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.