2016-09-10 15:59:00

பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலுக்கு தங்கம்


செப்.10,2016. பிரேசிலின், ரியோவில் நடைபெற்றுவரும், மாற்றுத்திறனாளிகள்  ஒலிம்பிக் போட்டியில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ரியோவில், 31-வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இச்சனிக்கிழமை காலையில் நடைபெற்ற, உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் அவர்கள், தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

இந்த பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய போட்டியாளர் வருண் சிங் பாட்டி அவர்கள் வெண்கலம் வென்றுள்ளார்.

தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் அவர்கள், தாண்டிய உயரம் 1.89 மீட்டர் ஆகும். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சக போட்டியாளர் வருண் சிங் பாட்டி அவர்கள் தாண்டிய உயரம் 1.86 மீட்டர் ஆகும்.

இந்தியா சார்பில், மாற்றுத்திறனாளிகள் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை என்றும், 1.89 மீட்டர் உயரத்தைத் தாண்டி வரலாற்றில் இடம் பெற்றுள்ளார் என்றும், இதன் வழியாக, இந்திய நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது..

மேலும், முதல்வர் ஜெயலலிதா அவர்கள், மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு 2 கோடி ரூபாய் பரிசை அறிவித்துள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.