2016-09-09 17:02:00

காற்று மாசுபடுவதால் 14 இலட்சம் இந்தியர் உயிரிழப்பு


செப்.09,2016. காற்று மாசுபடுவதால், இந்தியாவும், சீனாவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.

காற்று மாசுபடுவதால் ஏற்படும் நோய்களால், உலகில், 2013ம் ஆண்டில், ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட இறப்புகள் இடம்பெற்றுள்ளன என்றும், இந்த இறப்புகளில் ஏறத்தாழ அறுபது விழுக்காடு, உலகில், மக்கள் தொகை அதிகமாகவுள்ள இரண்டு நாடுகளில் இடம்பெற்றுள்ளன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

உலகளவில் இறப்புகள் ஏற்படுவதற்கு நான்காவது பெரிய காரணமாக காற்று மாசு உள்ளது எனவும், காற்று மாசு காரணமாக உலக அளவில் 200 பில்லியன் டாலர் பொருளாதாரம் வீணாகியுள்ளது எனவும், சீனாவே இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.

காற்று மாசுபடுவதால் உலகளவில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள ஆகும் செலவுகள் குறித்த உலக வங்கியின் புதிய அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபடுவதால், 2013ம் ஆண்டில், இந்தியாவில் 14 இலட்சம் பேரும், சீனாவில் 16 இலட்சம் பேரும் இறந்துள்ளனர்.

புகைபிடிப்பதால் ஏற்படும் இறப்புகளைப் போல, பத்து விழுக்காடு இறப்புகளுக்கு காற்றுமாசு காரணமாக உள்ளது என, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.