2016-09-08 15:58:00

"chimera-beings" திட்டத்திற்கு அமெரிக்க ஆயர்களின் எதிர்ப்பு


செப்.08,2016. மனிதர்களையும், மிருகங்களையும் வேறுபடுத்திக் காட்டும் இலக்கணத்தை அழிக்கும் ஒரு முயற்சியாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு அறிவியல் ஆய்வாளர்கள் மேற்கொள்ள விழையும் ஓர் ஆய்வுக்கு, அரசு நிதி ஒதுக்கக்கூடாது என்று, அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

மனிதக் கருவையும், stem cell எனப்படும் உயிரணுவையும் அடிப்படையாகக் கொண்டு, சோதனைக் குழாய்களில் வளர்க்கப்படும் மிருகங்களில் மனித மரபணுக்களைப் புகுத்தி, "chimera-beings" என்ற புதுவகை உயிர்களை உருவாக்கும் இத்திட்டத்திற்கு அமெரிக்க ஆயர் பேரவை தன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இறைவனின் படைப்பில் ஒவ்வோர் உயிரும் தனித்துவம் மிக்கது என்று கூறும் ஆயர்கள், மனிதர்களையும் மிருகங்களையும் பிரித்துக் காட்டும் இயல்பு இலக்கணங்களை மாற்றி அமைப்பது, விபரீதமாக முடியும் என்று கவலையை வெளியிட்டுள்ளனர்.

மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு, இத்தகைய விபரீதமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று அமெரிக்க ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : USCCB / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.