2016-09-06 16:42:00

பெருங்கடல்கள் வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்பு - புதிய ஆய்வு


செப்.,06,2016. பெருங்கடல்கள் வெப்பமடைவதால் உண்டாகும் உலகளாவிய தாக்கம் குறித்து மிகவும் குறைவாக மதிப்பீடு செய்யப்படுவதாக 12 நாடுகளைச் சேர்ந்த 80 அறிவியலாளர்கள் தொகுத்துள்ள ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

பருவநிலை மாற்றத்தால் ஜெல்லி மீன்கள், ஆமைகள், கடல் பறவைகள் ஆகியவை தங்களைக் காத்துக் கொள்ள கடல் நீரில் இறங்கி விடுவதாக, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு நிறுவியுள்ள ஆய்வு கூறியுள்ளது. முன்பு, பெருங்கடல் நீர் மிகவும் குளிராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மீன் இனங்கள் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப, புதிய இடஙகளுக்குப் பெயர்ந்து விட்டதால், உலகின் மீன்பிடித்துறை சீர்குலைந்து விடலாம் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடல் தொடர்பான வெப்ப மண்டல நோய்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாசிகளின் அதிகரிப்பு ஆகிய பிரச்சனைகள் பல புதிய பகுதிகளுக்கு பரவக்கூடும் என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரம் : BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.