2016-09-05 16:27:00

தாக்குதலுக்கு எதிரான பதிலுரை பழிவாங்குவதாக இருக்க வேண்டாம்


செப்.,05,2016. கடந்த வார இறுதியில் பிலிப்பீன்சின் Davao நகரில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதல் குறித்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

பிலிப்பீன்சின் தென் நகரமான Davao நகரில், 14 பேரின் உயிரிழப்புக்கும் 67 பேர் காயமடைதலுக்கும் காரணமான இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து கண்டனத்தை வெளியிட்டுள்ள அதேவேளை, மக்கள் அமைதி காக்குமாறும் விண்ணப்பித்துள்ளனர் ஆயர்கள்.

இயேசு சபையினரால் நடத்தப்படும் Davao பல்கலைக்கழகத்திற்கு வெளியே, மக்கள் கூடியிருந்த இரவுச் சந்தையில் நடந்த இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு, Abu Sayyaf என்ற புரட்சிக்குழு பொறுப்பேற்றுள்ளது.

'இத்தாக்குதல் குறித்த மக்களின் பதிலுரை பழிவாங்குதலாக இருக்கவேண்டாம், மாறாக அமைதியாக இருக்கட்டும் என விண்ணப்பித்துள்ளார் பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர், Socrates Villegas.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.