2016-09-05 16:18:00

சீனாவில் சிறைவைக்கப்பட்டிருந்த 5 கிறிஸ்தவர்கள் விடுதலை


செப்.,05,2016. அரசு நடவடிக்கைகளுக்கு தடையாக இருந்தார்கள், மற்றும், சமூக ஒழுங்கிற்கு ஊறுவிளைவித்தர்கள் என்ற குற்றச்சாட்டுகளின்பேரில், ஏறத்தாழ கடந்த 5 மாதங்களாக சீன அரசால் சிறை வைக்கப்பட்டிருந்த 5 சீன கிறிஸ்தவர்களை திடீரென விடுதலைச் செய்துள்ளது அரசு.

இஞ்ஞாயிறன்று சீனாவின் Hangzhou நகரில் துவங்கியுள்ள ஜி.20 மாநாட்டிற்கு முன்னோடியாக இந்த விடுதலைகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் Guankou கிறிஸ்தவ கோவிலை அரசு இடித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் போராட்டம் நடத்திய கிறிஸ்தவர்கள் ஐவரை, சமூக ஒழுங்கிற்கு ஊறுவிளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்து சிறையிலடைத்திருந்தது சீன அரசு.

தற்போதைய ஜி 20 மாநாட்டிற்கு முன்னதாக மக்களை சமாதானப்படுத்தும் நோக்கில் இவ்விடுதலைகளை அரசு மேற்கொண்டுள்ளதாக கிறிஸ்தவ வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.