2016-09-05 16:08:00

அனைவரும் பொது நலனுக்குப் பங்களிப்போம் - திருத்தந்தை


செப்.05,2016. 'கடவுளைக் கொண்டு கட்டடத்தை எழுப்புபவர், பாறையின் மீது கட்டியெழுப்புகிறார், ஏனெனில், சிலவேளைகளில் நாம் விசுவாசக் குறைபாடுடையவர்களாக செயல்பட்டாலும், இறைவன் எப்போதும் விசுவாசத்துக்குரியவராகவே உள்ளார்' என்ற வார்த்தைகள் இத்திங்களன்று திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியிடப்பட்டன.

மேலும், செப்டம்பர் மாத செபக் கருத்தை ஒரு காணொளிச் செய்தியாக வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதனை மையமாக வைத்து சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

'மனித குலம் அனுபவித்துவரும் நெருக்கடிகள், பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்புடையவை மட்டுமல்ல, சுற்றுச்சூழல், கல்வி, ஒழுக்க ரீதி மற்றும் மனிதாபிமானம் தொடர்புடையவை' என தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நெருக்கடி என நாம் கூறும்போது, ஆபத்துக்களைப் பற்றி மட்டுமல்ல, வாய்ப்புக்களைப் பற்றியும் பேசுகிறோம், அவ்வாய்ப்புக்கள் என்பவை ஒருமைப்பாட்டைக் குறிக்கின்றன, ஏனெனில் பொது நலனுக்கும், மனிதனை மையமாகக்கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஒவ்வொருவரும் பங்களிப்பதை இது எதிர்பார்க்கின்றது என தன் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.