2016-09-04 13:54:00

இது இரக்கத்தின் காலம் - அன்பின் கனி சேவை


புனித அன்னை தெரேசா கூறியவை....

உதவும் கரங்கள், செபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தவை.
எல்லாராலும் பெரிய காரியங்களை ஆற்ற இயலாது, ஆனால், சிறிய காரியங்களை மிகுந்த அன்போடு நம்மால் ஆற்ற முடியும்.
மக்கள் பல நேரங்களில் அறிவற்று, தன்னலத்தோடு செயல்படுகின்றனர்.. அவர்களை மன்னித்துவிடுங்கள்.
நீங்கள் கனிவானவராக இருந்தால், மக்கள் தேவையில்லாமல், உங்களைக் குறை சொல்வார்கள். எனினும், கனிவாக நடந்துகொள்ளுங்கள். நீங்கள் நேர்மையாய் நடந்தால், மக்கள் உங்களை ஏமாற்றுவார்கள். எனினும், நேர்மையாக இருங்கள். நீங்கள் மகிழ்வாக இருந்தால், மக்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். எனினும், மகிழ்வாக இருங்கள். நீங்கள் இன்று செய்யும் நன்மை, நாளை மறக்கப்படலாம். எனினும், நன்மை செய்யுங்கள். உங்களிடம் இருக்கும் சிறந்தவற்றை உலகுக்குக் கொடுத்தாலும், அது போதுமானதாக இருக்காது. எனினும், உங்களிடம் இருக்கும் சிறந்தவற்றை வழங்குங்கள். இறுதியில், உங்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே உள்ள உறவை அல்ல, உங்களுக்கும், கடவுளுக்கும் இடையே உள்ள உறவையே பார்ப்பீர்கள்.
தண்டனை வழங்க தாமதம் செய்யுங்கள். ஆனால், மன்னிப்பு வழங்க சிறிதும் யோசிக்காதீர்கள்.
உங்களை வருத்தும்வரைக் கொடுங்கள்.
விசுவாசத்தின் கனி, அன்பு; அன்பின் கனி, சேவை.
கண்ணால் காணக்கூடிய உன் சகோதரரை அன்பு கூராமல், காணமுடியாத கடவுளை அன்புகூர்கிறேன் என்று எப்படி கூறமுடியும்?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.