2016-08-30 15:16:00

பாலின சமத்துவமின்மையால் பொருளாதார பாதிப்பு


ஆக.30,2016. ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த தென் பகுதி நாடுகள், பாலின சமத்துவமின்மையால் ஆண்டுதோறும் ஏறத்தாழ 9,500 கோடி டாலர்களை இழக்கின்றன என ஐ.நா தெரிவித்துள்ளது.

ஆப்ரிக்காவில், பெண்கள் நிலத்தைச் சொந்தமாக வைத்துக் கொள்வதற்கும் முன்னோர்களின் நிலத்தை நிர்வகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்கு பெரும் பகுதியில் உள்ள பெண்கள் பணம் பெற துன்புறுகின்றனர் என ஐ.நா. வளர்ச்சி திட்ட தலைவர் ஹெலன் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, அவர்கள் நல்ல விதைகளையும் உரங்களையும் வாங்க முடியாது இருப்பதால், அது அவர்களின் உற்பத்தி திறனை குறைக்கிறது எனவும் தெரிவித்தார் கிளார்க்.

இந்த சமத்துவமின்மையை சரிசெய்வதன் வழியாக, ஆப்ரிக்காவில் பொருளாதார வளர்ச்சியை பெரிய அளவில் ஊக்குவிக்க முடியும் என ஐ.நா. வளர்ச்சி திட்ட தலைவர் கிளார்க் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.