2016-08-30 15:09:00

நைஜீரியாவின் வடகிழக்கே மனிதாபிமான நெருக்கடி


ஆக.30,2016. நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உடனடி உதவிகள் கிடைக்காவிட்டால், போதிய ஊட்டச்சத்து இன்மையால் ஐம்பதாயிரம் குழந்தைகள்வரை உயிரிழக்க நேரிடலாம் என ஐ.நா. கூறியுள்ளது.

போக்கோ ஹராமின் ஆயுதப் போராட்டம் காரணமாக அங்கு இருபது இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வருவதாக, உதவி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இப்பகுதியில் உணவு உதவிகளை நாடியுள்ளோரின் எண்ணிக்கை 45 இலட்சமாக உயர்ந்துள்ளதாகவும், போதிய சத்துணவின்மையால் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை, 2 இலட்சத்து 44 ஆயிரம் எனவும், அண்மை செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.